×

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

வத்தலக்குண்டு, ஜூன் 4:  வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா 4 நாட்கள் வெகு விமரிசையாக நடந்தது. பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். விழாவில் பசுமை வதிலை இயக்கம் சார்பாக பக்தர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கலைநிகழ்ச்சிகள், அன்னதானம் நடந்தது. இதில் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Muthuramaniamman Temple Festival ,
× RELATED பொன்னானி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா